பாமக கிழக்கு மாவட்டம் சார்பாக முப்பெரும் விழா

353பார்த்தது
பாமக கிழக்கு மாவட்டம் சார்பாக முப்பெரும் விழா
பாட்டாளி மக்கள் கட்சி தர்மபுரி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றியத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. முதலாவதாக சுகர் மில் அருகே உழவர் பேரியக்கம் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் இரண்டாவதாக மறுக்காலம்பட்டியில் கொடியேற்று விழா நிகழ்ச்சி மற்றும் மூன்றாவதாக அம்மாபாளையம் பச்சையம்மன் கோவில் வளாகத்தில் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தை ஒன்றிய செயலாளர் கார்த்திக் மற்றும் ஒன்றிய தலைவர் தனசேகர் தலைமை தாங்கினார்இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக உழவர் பேரியக்கம் மாநில செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இல. வேலுச்சாமி இளைஞர் சங்க மாநில செயலாளர் பி வி செந்தில் மற்றும் மாவட்ட செயலாளர் அரசாங்கம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் இமயவர்மன், மைக்கண்ணன் மாவட்ட பொருளாளர் நாகேஸ்வரி மற்றும் சமூக நீதிப் பேரவை மாவட்ட செயலாளர் ஆனந்தன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகன் அருள் கண்ணன் சத்யராஜ் ஜெயராமன் ஈஸ்வரன் தேர்தல் பணிக்குழு மாவட்ட செயலாளர் ராம அறிவழகன் மற்றும் உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் சின்னசாமி மாவட்ட துணை செயலாளர் பன்னீர்செல்வம்
வெங்கடேஷ் நாயுடு மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்
நகர செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக தேர்தல் பணிக்குழு ஒன்றிய தலைவர் செந்தமிழ் செல்வன் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி