தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பெண்ணாகரம் தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, மற்றும் அரூர் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 12 லட்சத்தி 62 ஆயிரத்து 409 வாக்காளர்கள் உள்ளனர்.
பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 272 மொத்த வாக்குச்சாவடி மையங்களின் 2, 41, 939 வாக்காளர்களும், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் 294 மொத்த வாக்குச்சாவடி மையங்களின் 2, 49, 424 வாக்காளர்களும், தருமபுரி சட்டமன்ற தொகுதியில் 308 மொத்த வாக்குச்சாவடி மையங்களின் 2, 63, 934 வாக்காளர்களும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 314 மொத்த வாக்கு சாவடி மையங்களின் 2, 59, 831 வாக்காளர்களும், அரூர் தனி தொகுதியில் 301 மொத்த வாக்குச்சாவடி மையங்களின் 12, 66, 409 வாக்காளர்கள் உள்ளனர்.
தற்பொழுது தருமபுரி மாவட்டத்தில் புதிய வாக்குச்சாவடி நிலையங்கள் உருவாக்குதல் வாக்குச்சாவடி இடம் மாற்றம் செய்தல் வேறு கட்டிடத்திற்கு மாற்றம் செய்தல் பெயர் திருத்தம் செய்தல் பகுதி பரிசீலமைப்பு உள்ளிட்ட வாக்குச்சாவடி மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.