தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பூதநத்தம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்" சிறப்பு மருத்துவ முகாமில் சிறப்பு அழைப்பாளராக பாப்பிரெட்டிப்பட்டி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பி. எஸ். சரவணன் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு மகபேறுக்கான ஊட்டச்சத்து தொகுப்பினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் அருணாசலம், ஒன்றிய குழு உறுப்பினர் தாமோதிரன், சுகாதரம் துறை சார்ந்த அரசு மருத்துவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.