லட்சுமி நாராயணா கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

69பார்த்தது
தர்மபுரி அதகப்பாடி பகுதியில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு லட்சுமி நாராயணா சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இன்று செப்டம்பர் 28 புரட்டாசி 2வது சனிக்கிழமையை முன்னிட்டு லட்சுமி நாராயணா சாமிக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து லட்சுமி நாராயணா சிறப்பு அபிஷேகங்கள் பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருக்கோவில் நிர்வாகம் சார்பாக 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப் பட்டது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு அன்னதானத்தில் பங்கு பெற்றனர்.

தொடர்புடைய செய்தி