தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மோளையானூர் கிராமத்தில் இரண்டு நாட்களாக பெய்யாமல் இருந்த வடகிழக்கு பருவமழை இன்று 19. 10. 24 அதிகாலை பெய்யத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மீண்டும் அதிக மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்தால் மோளையானூர் பகுதியில் நிலத்தடி நீர் மட்டும் உயரும். விவசாயிகள், உழவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். குடிநீர் பற்றாக்குறை நீங்கி கிணறுகள், ஆறுகள், ஏரிகள் குளங்கள் நிரம்பும்.