தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வெற்றிலைகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரத்தியேகமாக வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று (அக்டோபர் 06) காலை கூடிய வாரச்சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, உள்ளீட்டு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் வெற்றிகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை 10, 000 ரூபாய் முதல் 18000 ரூபாய் வரை விற்பனையாகி நேற்று ஒரே நாளில் சுமார் 4. 50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.