கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது

55பார்த்தது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே, தென்கரைகோட்டையில் இருந்து, வடகரை செல்லும் சாலையில், கோபிநாதம்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக டூவீலரில் வந்த நபரை நிறுத்தி, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் வாச் சாத்தி பகுதியை சேர்ந்த சிவக்குமார் (42) என்பதும், அவர் மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரிந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி