ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட பதிவில். “ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிவகோடி கோயிலில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் வருத்தமளிக்கிறது. இந்த பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.