தர்மபுரி அதியமான் கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காலபைரவர் 1200 வருடம் பழமை வாய்ந்த திருக்கோயில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு நேற்று காலை 5. 30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் காலை 6 மணி அளவில் கணபதி ஹோமம் 64 பைரவர் ஹோமம் ஏகாந்த ருத்ர ஹோமம் காலை 8 மணிக்கு கோ பூஜை அஸ்தவ பூஜை காலை 8. 30 மணிக்கு பைரவர் உற்சவமூர்த்தி திருக்கோயிலை வளம் வருதல் பைரவருக்கு காலை 9 மணிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்ற சுவாமிக்கு ராஜ அலங்காரம் சிறப்பு தரிசனம் பெற்றனர். கோயில் நிர்வாகத்தின் சார்பாக பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து இரவு 10மணிக்கு 1008கிலோ மிளகாய் 108 கிலோ மிளகு சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்றது 64 பைரவர் யாகம் மகா குருதி பூஜை இரவு 2. 30மணிக்கு பைரவர் சுவாமி பல்லாக்கில் திருக்கோயிலை வளம் வருதல் இன்று அதிகாலை 3 மணிஅளவில் 108 லிட்டர் பால் அபிஷேகம், கலச அபிஷேகம் எட்டு வகையான பல அபிஷேகங்கள் நடைபெற்றது சுவாமிக்கு சத்ரு சம்ஹாரம் அலங்காரம் செய்யப்பட்டு சதுர்வேத பாராயணம் சிறப்பு தரிசனம் நடந்தது.