தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கசியம்பட்டி கிராமத்தில் பாலசுப்பிரமணியம் என்பவர் 1996 ஆம் ஆண்டு 5 ஏக்கர் 23 சென்ட் நிலம் வரதராஜன் என்பவரிடம் வாங்குவதற்காக 5 லட்சம் என்று பேசி 4, 93, 000 தொகையை முன்பணமாக தொகையை கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார். மீதமுள்ள தொகையை பத்திரப்பதிவு செய்த பிறகு செலுத்துவதாக ஒப்பந்தத்தில் எழுதி வாங்கியுள்ளார். அதன் பிறகு பத்திரப்பதிவு செய்வதற்கு கேட்ட பிறகு இன்று நாளை என்று காலதாமதமாக செய்து மீதமுள்ள தொகையை ஏமாற்றி வந்துள்ளார். அதன் பிறகு பாலசுப்பிரமணி இதற்கு மேல் பொறுக்க முடியாமல் 2007 ஆண்டு பாலக்கோடு நீதிமன்றத்தில் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தராமல் ஏமாற்றி வருவதாக வழக்கு தொடுத்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு பாலசுப்பிரமணியம் இறந்து விடுகிறார். இது வரை பணமும் தராமல் நிலமும் தராமல் இருப்பதால் , அவரது மகன் தனமூர்த்தி இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியார் அலுவலகத்திற்கு மீண்டும் மனு கொடுப்பதற்காக வந்த தனமூர்த்தி திடிரென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு பெட்ரோல் ஊற்றி தன்னைத் தானே எரித்துக் கொள்ள முயற்சி செய்தார். அப்போது அங்குள்ள காவல் அதிகாரிகள் தீயணைப்புத் துறையினர்கள் அவரை தடுத்து காப்பாற்றி விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.