தகடூர் முன்னாள் ராணுவ வீரர்கள் கூட்டமைப்பு சார்பில் கார்கில் போர் 25-ம் ஆண்டு வெள்ளி விழா, மற்றும் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துதல் மற்றும் அமைதி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் தர்மபுரி ஒட்டப்பட்டி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ராணுவ வீரர் நரசிம்மன் தலைமை வகித்தார். புகழேந்தி வரவேற்றார். தியாகராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களும் மலர்வளையம் வைத்தும், மலர் தூவியும் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து முன்னாள் ராணுவவீரர்கள் மவுன ஊர்வலமாக தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சேலம் மெயின்ரோடு, முக்கிய வீதிகள் வழியாக சென்று சென்று மீண்டும் அலுவலகத்தை அடைந்தனர். இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் சிவசங்கரன், விநாயக மூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், துணை தலைவர் முனியப்பன், துணை செயலாளர் மணியன், நிர்வாகிகள் மல்லிகார்ஜூனன், சின்னசாமி, பசுவராஜ், சோமசுந்தரம், சுந்தரராஜ், கேசவன், பொன்னுசாமி, வையாபுரி, ரகு, பொன்னுசாமி மற்றும் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி என்சிசி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்