சுற்றுச்சூழல் அமைப்பினர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை கூட்டம்

55பார்த்தது
தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும் காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரிக் கரையில் வருகின்ற 08.09.2024 அன்று நடைபெறவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி, இ.ஆ.ப., தலைமையில் இன்று(ஆக.31)நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

தமிழகத்தின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, பரமாரிப்பில்லா மலே காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும் காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி 2024-ஆனது ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை வருகின்ற 08.09.2024 அன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது.

காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியில் தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியர்கள், சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு பொதுமக்கள் கலந்து கொண்டு, நம் மாநில மரமான பனை மரத்தை நட ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி