ஆட்சியர் அலுவலகம் அருகே ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று செப்டம்பர் 25 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 2019 புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. ஆன்லைன் அபராதம் முறையை முற்றிலுமாக கைவிட வேண்டும். டெல்லி மகாராஷ்டிரா அரசுகளை போல் பைக்டாக்சியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவகுரு மாவட்டத் துணைத் தலைவர் தலைமை தாங்கினார். ராஜகோபால் மாவட்ட செயலாளர் முன்னிலை வகித்தார். நாகராஜான் சி ஐ டி யு மாநில செயலாளர் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வின் போது ஆட்டோ சங்க நிர்வாகிகள், தர்மபுரி மாவட்ட கே எம் ஹரிபட் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் இந்த கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி