அரூரில் 78 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

68பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கச்சேரிமேட்டில் தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள். இந்த வாரம் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 130 விவசாயிகள் மேற்பட்ட 800 மஞ்சள் மூட்டைகளை எடுத்து வந்தனர். மஞ்சள் விரலி ரூ. 15, 809 முதல் 17. 889 வரை ஏலம் குண்டு (கிழங்கு) மஞ்சள் குவிண்டால் ரூ. 14. 909 முதல் 16. 300 வரையிலும் விற்பனை யானது. ஏலத்தில் ரூபாய் 78 லட்சத்திற்கு மஞ்சள் எனும் போனதாக செயலாளர் அறிவழகன் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி