தமிழகம் முழுவதும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம் வந்த வகையில், நேற்று செப்டம்பர் 28 புரட்டாசி மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கலை கட்டியது. தர்மபுரி நகர பகுதிக்கு உட்பட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை பர வாசுதேவர் பெருமாள் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போன்று கிருஷ்ணாபுரம் அருள்மிகு லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலிலும் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, மேலும் மூக்கனூர் ஆதிமூல பெருமாள் சாமி கோவிலிலும் அதகப்பாடி லட்சுமி நாராயணசாமி கோவிலிலும், அதியமான் கோட்டை சென்றாய பெருமாள் சாமி கோவிலிலும், சுவாமிக்கு பல்வேறு துறைகளைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.