தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூரில் வாரம்தோறும் வெள்ளி கிழமைகளில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற
ஆட்டு சந்தை நடக்கிறது. நேற்று செப்டம்பர் 20 நடைபெற்ற சந்தையில் ஆடுகளை வாங்க மற்றும் விற்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ண கிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள்
வந்தனர். நேற்று 160க்கும் மேற்பட்ட ஆடுகளை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடுகள் எடையை பொருத்து 5, 200 ரூபாய் முதல் 9, 500 ரூபாய் வரை மொத்தம் 18 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.