கல்வராயன் மலையில் தர்மபுரி எஸ்பி திடீர் ரெய்டு

72பார்த்தது
அரூர் தாலுகாவில் கோட்டப்பட்டி வனப்பகுதியில் உள்ள கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை மாவட்ட எல்லைகளான கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயரம் கொண்ட கல்வராயன் மலைகளில்
சில மாதங்களுக்கு முன்பு
கள்ளக்குறிச்சி விஷசாராய விபத்துக்களால் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசு கள்ளச்சாராயத்தை முற்றிலும் அழிக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் இன்று அதிகாலை அரூர் தாலுகாவில் உள்ள கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மற்றும் சேலம் மாவட்டத்தை ஒருங்கிணைக்கும் மாவட்ட எல்லையான கடல்மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயரம் கொண்ட கல்வராயன்மலை பகுதியை கள்ளச்சாரய வியாபாரிகள் கடத்த பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து,

அந்த பகுதியில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகன்நாதன் கோட்டப்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் அரூர் பகுதி வன அதிகாரிகள் 35 பேர் கொண்ட குழுவினர் கல்வராயன் மலையில் திடீர் ரெய்டில் ஈடுபட்டனர்.
அடர்த்தியான வனங்களை கொண்ட மலைப்பகுதியில் 4 கிலாமீட்டர் தூரம் கரடுமுரடான பாதையில் மலை உச்சியில் சென்று மாவட்ட எல்லை பகுதி வரை சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் கள்ளசாராய நடமாட்டம் குறித்து எந்த ஒரு சாத்திய கூறும் இங்கு இல்லை என்பதை உறுதி படுத்திக்கொண்டு திரும்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி