ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை, முருகனுக்கு உகந்த நாளாக உள்ளது. முருக னின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில், திருகார்த்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும், ஏராளமான பக்தர்கள் அன்று திருத்தணிக்கு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலிருந்தும் ஏராள மான பக்தர்கள் விரதம் இருந்து, காவடி எடுத்து கொண்டு செல்கின்றனர். அரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து காவடி எடுத்தும், அலகு குத்தி கொண்டும், 1500க்கும் மேற்பட்டோர்முருகனை தரிசிக்க திருத்தணி சென்றனர்.