நல்லம்பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு ஊர்வலம்

84பார்த்தது
தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள் சார்பில் போதை பொருட்கள், கள்ளச்சாராயம் மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இன்று செப்டம்பர் 26 நடைபெற்றது. நல்லம்பள்ளி அடுத்த வடக்குதெரு கொட்டாவூர் பேருந்து நிறுத்தம் பணியில் தொடங்கிய ஊர்வலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சென்றது. இந்த ஊர்வலத்தை காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இதில் காவல் ஆய்வாளர் கலையரசி, உதவி காவல் ஆய்வாளர்கள் கோபி, முருகன், அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி