விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு களப்பயிற்சி

60பார்த்தது
விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்பு களப்பயிற்சி
அரூர் அருகே உள்ள காட்பாடி கிராமத்தில் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு ஒருநாள் களப்பயிற்சி நடைபெற்றது. ஒருங்கிணைந்த பண்ணையகத்தில் கால்நடைகள் பராமரிப்பு, அதிக வருமானம் தரும் தொழில்நுட்பங்கள், சினை மாடு பராமரிப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை, நோய் பராமரிப்பு, சத்து பவுடர் அளிக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறட் பட்டது. சமுதாய மேம்பாட்டு அலுவலர் முகமது ரஹீம், வட்டார பொறுப்பு அலுவலர்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடினர். மேலும் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் கால்நடைகளில் பால் காய்ச்சல், நோய் கட்டுப்பாட்டுக்கான வயல்வெளி ஆய்வு மற்றும் மாடுகளில் உனி நீக்க கட்டுப்பாட்டுக்கான நானோ மெத்திக் கான் எனும் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் தொழில்நுட்பம் குறித்து விளக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி