அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அரூர் கோட்டத் தில் சாராயம், மதுபாட்டில் விற்பனையை தடுக்க தீவிர சோதனை நடத்தினர். அப்போது அரூர், மொரப்பூர், கம்பை நல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் சாராயம், மது கஞ்சா விற்றதாக 21 பெண்கள் உள்பட 111 பேர் கைது செய் யப்பட்டனர். அவர்களிடமிந்து 1, 890 மதுபாட்டில், 6 கிலோ கஞ்சா, 11 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டன்.