வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

76பார்த்தது
தருமபுரி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க் கும் கூட்டம் நேற்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் அப்பால் நாயுடு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தனியார் பல்கலைக்கழகம் சார்பில் தயாரிக்கப்பட்ட வனவிலங்கு களை விரட்டும் எந்திரம் அறிமு கப்படுத்தப்பட்டது.

அந்த எந்திரம் குறித்து வசாயிகளுக்கு வனத் துறையினர் செயல் விளக்கம் அளித்தனர். இந்த எந்திரத்தை ஆன் செய்தால், அதில் உள்ள சென்சார் மூலம் விவசாய நிலங்களுக்கு அருகில் யானை, காட்டு பன்றி, மயில், குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் பயிரை நாசம் செய்யும் நோக்த்து டன் வந்தால் அதனை விரட்டும் விதமாக பயங்காரசத்தத் துடன் ஒலி எழுப்பி விரட்டி விடும். இந்த எந்தி ரத்தை குறைந்த விலையில் விவசாயிகளுக்காக வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் வன பாதுகாவலர், வனத்துறை அதிகாரிகள் மற்றும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வனப்பகுதியை யொட்டியுள்ள 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி