உண்மையான காதலுக்கு எடுத்துக்காட்டு (வீடியோ)

1895பார்த்தது
சமீபத்தில் பீகார் மாநிலம் தர்பங்காவில் நடந்த திருமணம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. பிரதீப் மண்டல் என்பவரும் ரீதாகுமாரி என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மணமகனுக்கு இரண்டு கைகள் இல்லாத நிலையில் மணமகள் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இருந்தாலும் தான் காதலித்த நபரையே மணமுடிப்பேன் என முடிவெடுத்த ரீத்தாகுமாரி அவரை தற்போது திருமணம் செய்துள்ளார். கைகள் இல்லாத பிரதீப் மண்டல் தனது கால்களால் மணமக்களுக்கு மாலை போட்டு திருமணம் செய்துகொண்டார்.