பழனி தைப்பூசம்: 3,000 போலீசார் பாதுகாப்பு பணி

564பார்த்தது
பழனி தைப்பூசம்: 3,000 போலீசார் பாதுகாப்பு பணி
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசம் திருவிழா வரும் 19ஆம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகை தருவார்கள். இதற்கான ஏற்பாடுகள் மும்முமாக செய்யப்பட்டு வருகின்றது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் எஸ்.பி பிரதீப் வழிகாட்டுதலில் 10 டி.எஸ்.பிக்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 140 சப் இன்ஸ்பெக்டர்கள், 300 ஊர்க்காவல்ப்படையினர் தென் மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட உள்ளனர். என சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார்.

தொடர்புடைய செய்தி