பொங்கல் பரிசு தொகுப்பு- அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!

99020பார்த்தது
பொங்கல் பரிசு தொகுப்பு- அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. அது குறித்த அறிவிப்பு எதுவும் இந்த அரசாணையில் இல்லை. இருப்பினும், நாளைய தினம் ரூ.1,000 ரொக்கம் மற்றும் வேட்டி, புடவை ஆகியவை குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி