வரத்து குறைந்ததால் பீன்ஸ் விலை கடும் உயர்வு

67பார்த்தது
கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பீன்ஸ் உற்பத்தி வழக்கத்தை விட குறைந்தது. இதனால் பீன்ஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக உழவர் சந்தையில் 1 கிலோ பீன்ஸ் ரூ. 130 வரை விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே வரத்து மேலும் குறைந்தால் பீன்ஸ் விலை கடுமையாக உயர்ந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் இன்று 1கிலோ ரூ. 150-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் 1 கிலோ ரூ. 180 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி