டிரக் மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி

29497பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் அருகே உள்ள ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் நேற்று இரவு (ஏப்ரல் 23) பேருந்து ஒன்று டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி