துபாய், சார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைவெள்ளம் தேங்கியது. இந்த பாதிப்பால் மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். இந்நிலையில், நேற்று மக்கள் மீண்டும் தங்களது பணிகளுக்குத் திரும்பினர். இதனால், நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 200 மீட்டரை கடக்க சுமார் 45 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் அளவிற்கு இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.