கருமுட்டையை உறைய வைத்த தனுஷ் பட நடிகை

85பார்த்தது
கருமுட்டையை உறைய வைத்த தனுஷ் பட நடிகை
திரைத்துறையில் நடிகர், நடிகைகள் பலரும் 40 வயதை கடந்த போதும் திருமணம் செய்யாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. எப்போது திருமணம் என்று இதுவரை முடிவு செய்யாததால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனது கருமுட்டைகளை உறைய வைத்துள்ளதாக ‘பட்டாஸ்’ பட நடிகை மெஹ்ரீன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் “கடந்த 2 வருடங்களாக இதை செய்வதற்கு என்னை மனதளவில் தயார்படுத்தினேன். தொழில்நுட்பத்தின் உதவியால் நம்மால் சிறந்த முடிவுகளை எடுக்க முடிகிறது. நீங்கள் எதை செய்தாலும் அதை உங்களுக்காக செய்யுங்கள்” என பகிர்ந்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி