மலையாளத்தில் 'பிரேமம்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அதைத் தொடர்ந்து தமிழில் இவர் நடிகர்
தனுஷ் நடிப்பில் வெளியான 'கொடி' திரைப்படத்திலும், நடிகர் அதர்வாவுடன் 'தள்ளிப் போகாதே' திரைப்படத்திலும் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன், சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி உள்ளது. இதயத்திற்கு பக்கத்திலேயே டாட்டூ குத்தியுள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த இடத்தில் டாட்டூ குத்தனுமா என கிண்டல் அடித்து வருகின்றனர்.