அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்

373பார்த்தது
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து, அருண் மாதேஸ்வரன் இயக்கும் அடுத்த படத்திலும் தனுஷ் நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லரின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. இந்த படத்தின் டீசர் ஹாலிவுட் தரத்திற்கு இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கேப்டன் மில்லர் படம் திரைக்கு வருவதற்கு முன்பே மீண்டும் அருண் மாதேஸ்வரன், தனுஷ் இணைந்து படம் பண்ணுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி