நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய மக்கள் கல்வி இயக்கத் தலைவர் தேவநாதன் யாதவ் சென்னை குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். முதலீடு செய்த முதலீட்டாளர்கள் தேவநாதன் யாதவ் குறித்து புகார் கொடுத்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர். இந்த சூழலில் தான் அவர் திருச்சியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக அங்கு சென்று அவரை கைது செய்தனர்.