தமிழ்நாட்டில் 15 அரசு சட்டக் கல்லூரிகள், 12 தனியார் சட்டக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கீழ் 15 சட்டக்கல்லூரிகள், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளி, திருச்சியில் தேசிய சட்டப் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 36,640 மாணவர்கள் 5 ஆண்டுகால சட்டப்படிப்பையும், 11,910 மாணவர்கள் 3 ஆண்டுகால சட்டப்படிப்பையும் பயின்று வருகின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் 1.75 வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர் என சட்டப்பேரவையில், அமைச்சர் ரகுபதி தகவல் தெரிவித்துள்ளார்.