நீரில் மூழ்கி உயிரிழந்த ஆதரவற்ற குழந்தைகள்...

75பார்த்தது
நீரில் மூழ்கி உயிரிழந்த ஆதரவற்ற குழந்தைகள்...
சிரியாவின் வடமேற்கு பகுதியில் டார்குஷ் நகரின் அருகே பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆதரவற்றோர் பள்ளியில் இருந்து மாணவர்கள் மற்றும் சில ஆசிரியர்களை ஏற்றி வந்த பேருந்து, ஓரண்டஸ் ஆற்றை ஒட்டியுள்ள மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு இறங்கி பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றுக்குள் விழுந்தது. இக்கோர விபத்தில் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி