தன்னைச் சந்திப்பதற்காக சென்னைக்கு பயணம் செய்வதை திமுகவினர் தவிர்க்குமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். என்னை நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்குமாறு திமுகவினரை அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது; அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.