வட தமிழக மாவட்டங்களில் நாளையும் (பிப்.5) அடர் பனிமூட்டத்துக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனி தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. காலை நேரத்தில் எதிரே இருப்பதுகூட தெரியாத அளவுக்கு பனிப் பொழிவு உள்ளது. சென்னையில் இன்று நிலவிய அடர்ந்த பனிமூட்டத்தால், விமானங்கள், ரயில்கள் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.