பிரபஞ்சத்தில் இதுவரை காணப்படாத அளவிற்கு மிகப் பிரகாசமான கருந்துளையை ஐரோப்பிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் VLT எனப்படும் மிகப்பெரிய தொலைநோக்கியை பயன்படுத்தி இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருந்துளை குவாசர் என அழைக்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு பிரகாசமாக இருப்பதுடன், தினமும் ஒரு சூரியனுக்கு சமமான அளவு வளர்ந்து வருகிறது. சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு அதிகமாக பிரகாசிக்கிறது.