இன்று (ஜூன் 23) உலக கைம்பெண்கள் தினம்.!

83பார்த்தது
இன்று (ஜூன் 23) உலக கைம்பெண்கள் தினம்.!
கணவர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் கைம்பெண்கள் படும் இன்னல்களையும், அவர்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த உலக கைம்பெண்கள் தினம் ஐ.நா சபையால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகம் எங்கிலும் வாழும் கோடிக்கணக்கான கைம்பெண்கள் படும் பிரச்சனைகள் குறித்து ஐ.நா சபை கண்காணித்து அதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தவே இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கைம்பெண்கள் தினம் குறித்து காபூன் நாட்டு அதிபர் ஒமர் பூன்கோ மனைவி சில்வியா கொண்டு வந்த தீர்மானம் 23 டிசம்பர் 2010 ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி