வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிக் கணக்கின் வழியே வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில் இருந்து சில வங்கிகள் தவணை தொகை (EMI) பிடித்தம் செய்துள்ளது. இதையடுத்து, நிவாரண நிதியில் தவணை தொகையை பிடித்தம் செய்த வங்கிகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "பேரிடரால் பாதித்த மக்களின் கடனை வங்கிகள் தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும். நெருக்கடியான நேரங்களில் வங்கிகள் தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.