8 நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் கடிதம்

68பார்த்தது
8 நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் கடிதம்
பாகிஸ்தான் இஸ்லாமாபாத் நகரில் உள்ள உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளுக்கு ரெஷாம் என்ற பெண் பெயரில் கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. ரசாயமன் தடவிய அந்த கடிதங்களில் தெஹ்ரீக் நமூஸ்-இ-பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் பெயர் இடம்பெற்றுள்ளன. இந்த ரசாயனத்தில் மனிதர்களின் உடலில் பரவி மரணம் விளைவிக்கும் ஆபத்து உள்ளது. மேலும், அந்த கடிதத்தில் நீதிபதிகளின் உறவினர்களை கடத்தி சித்ரவதை செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி