தாய்க்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட மகள்கள்

27796பார்த்தது
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து அவரது மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட அன்னா சாகரம் பகுதியில் வீடு வீடாக சென்று தனது தாய் சௌமியா அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

இந்த தொகுதியில் எங்களது தந்தையைத் தொடர்ந்து தாயரும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவார் என்றும்
பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதலில் களத்தில் இறங்கி பெண்ணுரிமைக்காக போராடும் சௌமியா அன்புமணியை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி