அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து வாக்கு சேகரிப்பு

62பார்த்தது
அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து வாக்கு சேகரிப்பு
நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஹா சு.தமிழ்மணியை ஆதரித்து ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பட்டணம், வடுகம், சிங்களாந்தபுரம் , பிள்ளாநல்லூர், சந்திரசேகரபுரம், ஆண்டகலூர் கேட் ஆகிய பகுதிகளில் நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, இயக்குநர் நாஞ்சில் அன்பழகன் ஆகியோர் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிரணி இணைச் செயலாளருமான வெ.சரோஜா, ஒன்றியச் செயலாளர் வேம்பு சேகரன், பட்டணம் பேரூர் அதிமுக செயலாளர் கே.பாலசுப்பிரமணியம், வடுகம் பாலு, தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த விஷ்வா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி