தாமரை மலர்ந்தால் தங்கம் விலை குறையுமாம்.. நூதன பிரச்சாரம்!

23549பார்த்தது
தாமரை மலர்ந்தால் தங்கம் விலை குறையுமாம்.. நூதன பிரச்சாரம்!
கரூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து கரூர் வேலுசாமிபுரத்தில் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
கரூரில் இருந்தவர் இப்போது சிறையில் இருக்கிறார். ஏன் சிறையில் இருக்கிறார் என்ன செய்தார் உங்களுக்கு கொலுசு, ஹாட் பாக்ஸ் தந்தவர் இன்று கம்பி எண்ணுகிறார் என்றார்.

தாமரை வெற்றி பெற்றால் தங்கம் விலை குறையுமா என்று ஒரு பெண் கேள்வி கேட்க உடனே வானதி சீனிவாசன் தாமரையை வெற்றி பெறச் செய்தால் தங்கம் விலை கண்டிப்பாக குறையும் கம்மல் மட்டும் இல்லை ஒட்டியானமே செய்து போடுவோம் என்றார்.

தொடர்புடைய செய்தி