ஆக்ராவைச் சேர்ந்த திலீப் குமார் என்பவரது 7 வயது மகன், தனியார் பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று, பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுவன், தான் பள்ளிக்கு பள்ளிப் பையை எடுத்துச் செல்லாததால், ஆசிரியர் தன்னை அடித்து, கரண்ட் ஷாக் கொடுத்ததாக கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் பள்ளி முதல்வரிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.