ஓணத்தை குறி வைத்து நேந்திரன் வாழை சாகுபடி

71பார்த்தது
ஓணத்தை குறி வைத்து நேந்திரன் வாழை சாகுபடி
ஓணம் பண்டிகையை இலக்காகக் கொண்டு நேந்திரன் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கேரளாவின் ஓணம் பண்டிகை வருகிற செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த நிலையில், தற்போதே கேரள வாழை விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். வாழைக்காய் முதிர்ச்சியடையும் வேளையில்
நோயின் அறிகுறிகள் தென்படுவதால் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வேளாண் பல்கலை அறிவுறுத்துகிறது. வாழைகளை தாக்கும் இந்த நோய், தோலில் மட்டுமே தெரிவதோடு, உட்புறத்தை பாதிக்காது என்பதால், பழத்தில் அதிக சேதம் ஏற்படாது. இத்தகைய புள்ளிகள் மற்றும் அவை ஏற்படுத்தும் தழும்புகள் வாழைக்குலையின் சந்தை மதிப்பைக் கணிசமாகக் குறைக்கின்றன.

நேந்திரன் வாழை தமிழகத்தின் கோவை, நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி