8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

62பார்த்தது
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூன் 20) நீலகிரி, கோவை, திண்டுக்கல், தென்காசி, தேனி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி