விருத்தாசலம்: மாயமான 2 மாணவிகள் குடும்பத்திடம் ஒப்படைப்பு

50பார்த்தது
விருத்தாசலம்: மாயமான 2 மாணவிகள் குடும்பத்திடம் ஒப்படைப்பு
விருத்தாசலம் அடுத்த ஆலடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏரிப்பாளையத்தைச் சேர்ந்த 13 வயது மாணவியும், கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவியும் 7 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தனர். நேற்று பள்ளிக்கு சென்ற 2 மாணவிகள் காலை 11 மணிக்கு பள்ளி இடைவேளையின்போது அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சாப்பிட செல்வதாக கூறி சென்றுள்ளனர். 

ஆனால் அதன்பின் அவர்கள் பள்ளிக்கும், மாலையில் விடுதிக்கும் திரும்பி செல்லவில்லை. இதனால் விடுதியில் பணிபுரியும் ஆசிரியர் சித்ரா ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் 2 மாணவிகளும் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள தே. பவழங்குடி கிராமத்திற்கு வழி தவறி சென்றது தெரியவந்தது. உடனே காவல் துறையினர் அங்கு சென்று மாணவிகள் இருவரையும் மீட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி