கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் T. V. புத்தூர் ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு விழா மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ரூபாய் 28. 10 இலட்சம் மதிப்பீட்டில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் C. V. கணேசன் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் M. R. R. இராதாகிருஷ்ணன் M. L. A ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
உடன் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சரண்யா, விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத்அகமது, விருத்தாசலம் வட்டாட்சியர் உதயகுமார், விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்ராஹிம், மோகனாம்பாள், விருத்தாசலம் திமுக தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வேல்முருகன், நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.