மத்திய பட்ஜெட்டில் தமிழக மக்களை வஞ்சித்த பா. ஜனதா அரசை கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட தி. மு. க. சார்பில் இன்று (சனிக்கிழமை) 10 மணியளவில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.