கோயில்களில் பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

4236பார்த்தது
தேசிய நெடுஞ்சாலையின் அருகே இரண்டு கோவில்களில் பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற திருடனை பிடிக்க முயற்சி செய்த ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது தொடர்பாக கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்டப்பன்குறிச்சி கிராமத்தில் ஒருசமூகத்திற்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன், ஓம் சக்தி கோவில்கள் உள்ளது.

இக்கோயிலை உடைத்து உள்ளே சென்று உண்டியல் பணம் 3000 ரூபாயும், அருகே உள்ள சமுதாயக்கூடம் உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த கடப்பாரை மற்றும் திருப்பிலியை எடுத்துக்கொண்டு ஆதிதிராவிட சமூகத்தினர் வசிக்கும் தெருவில் சென்று ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே சென்று சாமியின் கழுத்தில் இருந்த 2 ¾ பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்று தப்பிக்க முயற்சிக்கும் போது, அதே கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ்-31, S/0 மாயவேல்(SC), ராமச்சந்திரன்-34 , S/0 சுப்பிரமணியன் ஆகியோர் திருடனை பிடிக்க முயற்சி செய்யும்போது கண்டபங்குறிச்சி சேர்ந்த மாதேஷுக்கு மூக்கு, கை , கால்களில் காயம் ஏற்பட்டது.

மேலும் தப்பிச்சென்ற திருடனை பிடிக்க சிசிடிவி கேமராக்களை வேப்பூர் போலிசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி